பெங்களூரு-காரைக்கால் ரெயில் மீண்டும் இயக்கம்
பெங்களூரு-காரைக்கால் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.
பெங்களூரு: பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு தினசரி ரெயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு-காரைக்கால் ரெயிலை மீண்டும் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
அதன்படி வருகிற 25-ந் தேதி முதல் பெங்களூரு-காரைக்கால் ரெயில் மீண்டும் இயங்க உள்ளது. ஆனால் பெங்களூரு சிட்டியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக புதிதாக திறக்கப்பட்டு உள்ள பையப்பனஹள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து இந்த ரெயில் இயங்க உள்ளது.
Related Tags :
Next Story