பெங்களூரு மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் 29-ந் தேதி வெளியீடு
பெங்களூரு மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் 29-ந் தேதி வெளியீடப்படுகிறது.
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்குகள் கர்நாடக ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அதனால் மாநகராட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சி இறுதி வாக்காளர் பட்டியல் 22-ந் தேதி (அதாவது இன்று) வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதை அடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 29-ந் தேதி வெளியிடப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி கூறியுள்ளது.
Related Tags :
Next Story