பெங்களூருவில் இயல்பைவிட அதிக மழை கொட்டியது


பெங்களூருவில் இயல்பைவிட அதிக மழை கொட்டியது
x

பெங்களூருவில் இயல்பைவிட அதிக மழை கொட்டியது

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த மூன்று ஆண்டுகளும் அணைகள் நிரம்பின. மழை பற்றாக்குறை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு பெங்களூருவில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. அதாவது பெங்களூருவில் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 344 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை 760 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது கூடுதலாக 414 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நகரில் கடந்த 6 நாட்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக ஸ்ரீராய் லே-அவுட், குமாரசாமி லே-அவுட், ராஜீவ்காந்தி நகர், காவேரி லே-அவுட், ரெயின்போ லே-அவுட் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. பெங்களூரு புறநகர், கோலார், ராமநகர், சிக்பள்ளாப்பூர் போன்ற மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.

=============


Next Story