மத மோதல்களை ஏற்படுத்த பி.எப்.ஐ. சதி மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி
மத மோதல்களை ஏற்படுத்த பி.எப்.ஐ. சதி செய்திருப்பதாக மந்திரி அஸ்வத் நாராயணா தெரிவித்துள்ளார்.
ராமநகர்:
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பி.எப்.ஐ. அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை ஒட்டுமொத்த நாடே வரவேற்கிறது. அந்த அமைப்பு எந்த ரூபத்தில் தலை எடுத்தாலும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வந்துள்ளது. மத மோதல்களை ஏற்படுத்த அந்த அமைப்பு சதி செய்தது. அந்த அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வந்தது.
அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. அந்த அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது. சமுதாயம் மற்றும் நாட்டின் நலனுக்காக எதிராக செயல்படும் எந்த அமைப்பையும் மத்திய அரசு விடாது. என்.ஐ.ஏ. சோதனையை தொடர்ந்து கர்நாடக போலீசாரும் சோதனை நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.