அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாட்னா,
நாட்டின் ஆயுதப்படைகளில் இளைஞர்களை 4 ஆண்டு பணிக்காலம் கொண்ட அக்னி வீரர்களாக சேர்ப்பதற்கு 'அக்னிபத் யோஜனா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் அக்னிவீரர்களாக சேருவோரின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு 3 ஆண்டு சிறப்பு பட்டப்படிப்பை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஆயுதப்படைகளுக்கான தீவிர ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரு நாளுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மற்றும் பக்சர் ஆகிய இடங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் என்ன செய்வீர்கள் என்று போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.
பீகாரை சேர்ந்த குல்ஷன் குமார் என்ற வாலில்பர் கூறுகையில், வெறும் 4 ஆண்டுகள் பணிபுரிந்தால் அதற்கு பிறகு வேறு வேலைகளுக்கு தேடி சென்று படிக்க வேண்டும் என்று கூறினார்.
பீகார் மாநிலம் முங்கர், ஜெஹானாபாத் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் சாலை மற்றும் ரெயில் மறியலில் ஈடுபட்டுள்ளானர். பஸ்களில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர்.
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகம் எதிராக 100க்கும் மேற்குபட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.