டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிதிஷ் குமார் சந்திப்பு


டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நிதிஷ் குமார் சந்திப்பு
x

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பீகாரில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிதிஷ் குமார் தற்போது பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் 3 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். நிதிஷ் குமார் நேற்று ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது, 2024 மக்களவை தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இல்லை என்றும் நிதிஷ் குமார் பேசியிருந்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ் குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.கெஜ்ரிவாலை சந்திக்கும் முன்பாக சிபிஐ (எம்) கட்சியின் பொதுச்செயலாளர் சிதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்தித்து பேசினார்.


Next Story