பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு


பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2024 8:18 PM IST (Updated: 23 Jan 2024 8:29 PM IST)
t-max-icont-min-icon

பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைவுக்கு பின் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகளுக்காக போராடிய கர்பூரி தாகூர், பீகாரில் இருமுறை முதல் மந்திரியாக பதவி வகித்தார்.


Next Story