பீகார் : திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு


பீகார் :  திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால்  பரபரப்பு
x

பீகார் ,பெகுசாய் பகுதியில் உள்ள பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்துள்ளது.

பீகார்,

பீகாரில் திறப்பு விழாவுக்கு முன்பே பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் ,பெகுசாய் பகுதியில் உள்ள பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்துள்ளது.

கந்தக் நதியின் குறுக்கே ரூ.13 கோடி செலவில், 206 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ள பாலம் இன்று காலை இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பாலம் கட்டும் பணி துவங்கி, 2017ல் முடிவடைந்தது.ஆனால், அணுகுசாலை இல்லாததால், பாலத்தில் போக்குவரத்து துவங்கவில்லை.


Related Tags :
Next Story