டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டு


டிஜிட்டல் வங்கி சேவைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டு
x

பெங்களூருவில் தபால் அலுவலகத்தின் டிஜிட்டல் வங்கி சேவைகளை கண்டு பில்கேட்ஸ் பாராட்டியுள்ளார். அத்துடன் பெண் அதிகாரியுடன் எடுத்த படத்தையும் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

டிஜிட்டல் தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக அவர் பெங்களூரு வந்திருந்தார். இங்கு டிஜிட்டல் பயன்பாடு குறித்து அவர் அறிந்தார். இங்குள்ள ஒரு தபால் அலுவலகத்தில் பணியாற்றும் குசுமா என்ற தபால் அதிகாரி டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வங்கி சேவைகளை வழங்குவதை நேரில் கண்டு வியப்படைந்தார். அந்த பெண் அதிகாரியுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பிறகு அவர் அந்த புகைப்படத்துடன் தனது இணையத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

தொழில் அதிபர் பில்கேட்ஸ் தனது பதிவில் கூறியுள்ளதாவது:-

இந்திய தபால் துறை வங்கி சேவைகளை டிஜிட்டலில் வழங்குகிறது. அதாவது பணம் எடுப்பது, டெபாசிட் செய்வது, பண பரிமாற்றம் டிஜிட்டல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 70 லட்சம் பேர் இந்த டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பொது கட்டமைப்புகளை உருவாக்குவதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

பாதுகாப்பாக கிடைக்கின்றன

இதனால் மக்களுக்கு பண பரிவர்த்தனை இல்லாத டிஜிட்டல் சேவைகள் உடனடியாக பாதுகாப்பாக கிடைக்கின்றன. நாட்டின் எந்த பகுதியில்இருந்தும் இந்த வசதி கிடைக்கிறது. பொதுமக்கள் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்துவதால் அவர்களின் வேலை பாதிக்கப்படுவது இல்லை.

மிச்சமாகும் அந்த நேரத்தில் மாறாக அவர்களின் சேமிப்பை அதிகரித்து கொள்கிறார்கள். பெங்களூருவை சேர்ந்த தபால் கிளை அதிகாரி குசுமா டிஜிட்டல் வங்கி சேவை குறித்தும், அதில் தான் ஆற்றும் பெருமை மிகு பணி குறித்தும் விளக்கியுள்ளார். இந்த வீடியோவை நான் பதிவேற்றம் செய்துள்ளேன்.

இவ்வாறு பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.


Next Story