மணிப்பூர் போன்ற நிலையை மேற்கு வங்காளத்திலும் பாஜக உருவாக்க முயற்சிக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


மணிப்பூர் போன்ற நிலையை மேற்கு வங்காளத்திலும் பாஜக உருவாக்க முயற்சிக்கிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x

மணிப்பூர் போன்ற நிலையை மேற்கு வங்காளத்திலும் உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்


கொல்கத்தா,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜியின் கான்வாய் வாகனங்கள் மீது ஜார்கிராம் மாவட்டத்தில் நேற்று போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மேற்கு வங்காள மந்திரி பிர்பாஹா ஹன்ஸ்தாவின் கார் சேதமானது.குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிப்பூர் போன்ற நிலையை மேற்கு வங்காளத்திலும் உருவாக்க பாஜக முயற்சிக்கிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேலும் மந்திரி பிர்பாஹா ஹன்ஸ்தாவின் வாகனம் தாக்கப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ,

மணிப்பூரில் இனக்கலவரத்தின் பின்னணியில் பாஜக இருந்தது. பாஜக மேற்கு வங்காளத்தில் சமூகங்களுக்கு இடையே இதேபோன்ற கலவரத்தை பிரதிபலிக்க முயற்சிக்கிறது.

நேற்றைய வன்முறையை நான் கண்டிக்கிறேன். குர்மிகள் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நான் நம்பவில்லை. குர்மி சமூகத்தை சேர்ந்தவர்கள் போல் மாறுவேடமிட்ட பாஜகவினர் இதன் பின்னணியில் இருந்தனர். என கூறியுள்ளார்.



Next Story