பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் காங்கிரஸ் ஆட்சியில் நடந்தது பா.ஜனதா சொல்கிறது
பா.ஜனதா நியமித்த விசாரணை குழு, இச்சம்பவம் 2019-2020 நிதிஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கண்டுபிடித்துள்ளது.
போபால்,
மத்தியபிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்குள்ள சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பிரவேஷ் சுக்லா என்பவர் கைது செய்யப்பட்டார். முதல்-மந்திரி சவுகான், பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் கால்களை கழுவி சுத்தப்படுத்தினார்.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் வி.டி.சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
பா.ஜனதா நியமித்த விசாரணை குழு, இச்சம்பவம் 2019-2020 நிதிஆண்டில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கண்டுபிடித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதே சமயத்தில், கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் குழு, கவர்னர் மங்குபாய் படேலை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தது. அதில், பழங்குடியினருக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.