எல்லா மதங்களையும் மதிப்பதே பாஜகவின் முன்னுரிமை; மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் - உ.பி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி


எல்லா மதங்களையும் மதிப்பதே பாஜகவின் முன்னுரிமை; மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் - உ.பி சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி
x

சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி டேனிஷ் ஆசாத் கூறியுள்ளார்.

லக்னோ,

நபிகள் நாயகம் பற்றி பா.ஜனதா செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நவீன்குமார் ஜிண்டால் ஆகியோர் தெரிவித்த கருத்துகள், சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், அவர்களை கைது செய்யக்கோரி நாடு முழுவதும் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.

இந்த நிலையில், அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிப்பதே கட்சியின் முன்னுரிமை என்பதை கட்சியின் நடவடிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று உத்தரபிரதேச சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி டேனிஷ் ஆசாத் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று கூறியதாவது, "பாஜகவின் செயல்பாடுகள், அனைத்து மதங்களையும் மதிக்கும் கட்சியின் முன்னுரிமையை பிரதிபலிக்கிறது.

அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிப்பதே கட்சியின் முன்னுரிமை என்பதை கட்சியின் நடவடிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

எங்கள் கட்சியும், எங்கள் அரசும் அனைத்து மதங்களின் ஒற்றுமையிலும் மரியாதையிலும் நம்பிக்கை வைத்துள்ளது. அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளனர்.

ஏதேனும் பிரச்சினை இருந்தால் பக்குவமாக முன்வைத்து, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். நாம் அமைதி பற்றி பேச வேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.

அரசாங்கத்தால் சிறுபான்மையினருக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, இருப்பினும், அவர்கள் அதை பற்றி அறியவில்லை" என்றார்.


Next Story