சுதந்திர தினவிழாவில் மதக்கலவரத்தை தூண்டிவிட பா.ஜனதா முயற்சி-காங்கிரஸ் குற்றச்சாட்டு


சுதந்திர தினவிழாவில் மதக்கலவரத்தை தூண்டிவிட பா.ஜனதா முயற்சி-காங்கிரஸ் குற்றச்சாட்டு
x

சுதந்திர தினவிழாவில் மதக்கலவரத்தை தூண்டிவிட பா.ஜனதா முயற்சி என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- சுதந்திர தினவிழாவில் சிவமொக்காவில் 2 பேருக்கு கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. கா்நாடக மாநிலம் அமைதிக்கு பெயர் போனது ஆகும். தற்போது கர்நாடகத்தில் நடைபெறும் சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது. அதுவும் சுதந்திர தினவிழாவில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எஸ்.டி.பி.ஐ. கட்சியை முன்னிலைப்படுத்தி கொண்டு, கர்நாடகத்தில் மதக்கலவரத்தை தூண்டிவிட பா.ஜனதா முயற்சிக்கிறது. மாநிலத்தில் பா.ஜனதாவால் சிறப்பான ஆட்சியை கொடுக்க முடியவில்லை.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து விட்டது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தவறி விட்டது. மாநிலத்தில் எங்கு சென்றாலும் வன்முறைகள், கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. போலீஸ் மந்திரியின் சொந்த மாவட்டத்திலேயே வன்முறை நடக்கிறது. சுதந்திர தினவிழாவின் போது மோதல் ஏற்பட்டு 2 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு எந்த விதமான நடவடிக்கையையும எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story