மேற்குவங்காள அரசியலில் பரபரப்பு; பாஜக மூத்த தலைவர் திரிணாமுல் காங்கிரசில் இணைகிறார்...?


மேற்குவங்காள அரசியலில் பரபரப்பு; பாஜக மூத்த தலைவர் திரிணாமுல் காங்கிரசில் இணைகிறார்...?
x

பாஜக மூத்த தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரை சந்தித்த சம்பவம் மேற்குவங்காள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா,

மேற்குவங்காள திரைத்துறையில் பிரபல நடிகையாக இருந்தவர் ரூபா கங்குலி. இவர் மகாபாரத நாடக தொடரில் திரவுபதி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.

இதற்கிடையே, நடிகை திரவுபதி 2015-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். அவர் பாஜக மகளிரணி மாநில தலைவியாக நியமிக்கபப்ட்டார். பின்னர், மாநிலங்களவைக்கு ரூபா கங்குலி பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குனல் கோஷை பாஜக மூத்த தலைவர் ரூபா கங்குலி நேற்று சந்தித்துள்ளார். கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் இந்த சந்தித்து நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலானது.

இதன் மூலம் ரூபா கங்குலி பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைய உள்ளதாக மேற்குவங்காள அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குனல் கோஷ், இது நட்பு ரீதியிலான சந்திப்பு இதில் எந்த அரசியிலும் இல்லை' என தெரிவித்துள்ளார்.


Next Story