கண் பார்வையற்ற மகள் பலாத்காரம்: தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
கண் பார்வையற்ற மகள் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
ஆனேக்கல்:-
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா ஜிகனி பகுதியில் 43 வயது தொழிலாளி வசித்து வருகிறார். அவருக்கு மனைவி மற்றும் 17 வயதில் மகள் உள்ளனர். அவரது மகள் கண் பார்வை இழந்தவர் ஆவார். இந்த நிலையில் தொழிலாளி கடந்த 2019-ம் ஆண்டு வீட்டில் இருந்த தனது மகளை பலாத்காரம் செய்தார். மேலும் இதுகுறித்து வெளியே கூற கூடாது எனவும் மிரட்டி உள்ளார். இதுமட்டுமல்லாது தனது மகளை, யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி மிரட்டி பலாத்காரம் செய்தார். இதில் மைனர் பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவரது தாய், மைனர் பெண்ணை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், மைனர் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.
அதைக்கேட்டு மைனர் பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். அப்போது தனது தந்தை தான் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக மைனர் பெண் கூறினாள். இதையடுத்து மைனர் பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கை முடித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது மகளை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.