படகு சவாரி 27-ந் தேதி வரை நீட்டிப்பு


படகு சவாரி 27-ந் தேதி வரை நீட்டிப்பு
x

சிக்கமகளூருவில் படகு சவாரி 27-ந் தேதி வரை நீட்டித்து கலெக்டர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்ட திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கியது. 22-ந் தேதி இந்த திருவிழா நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான கண்காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் விவசாய மேளா மட்டும் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இந்த விவசாய மேளா நிறைவடைந்தது. இதையடுத்து அன்றைய தினம் மாலை சிக்கமகளூரு திருவிழா நிறைவு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ரமேஷ், அனைவரையும் பாராட்டி பேசினார். மேலும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு அதிகாரிகள், மற்றும் பொது மக்களுக்கு தனது நன்றியையும் அவர் கூறினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:- சிக்கமகளூரு மாவட்ட நல்லூர் குளம், அயன்கெரே குளத்தில் படகு சவாரி நடந்து வருகிறது. இந்த படகு சவாரியை மேலும் சில நாட்கள் நீட்டிக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கை ஏற்று மேலும் 3 நாட்களுக்கு இந்த படகு சவாரி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 27-ந் தேதி இந்த படகு சவாரி நிறைவு பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story