ஆற்றில் இளம்பெண் பிணம் மீட்பு; போலீஸ் விசாரணை


ஆற்றில் இளம்பெண் பிணம் மீட்பு; போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2022 12:30 AM IST (Updated: 11 Oct 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

பண்ட்வால் அருகே ஆற்றில் இருந்து இளம்பெண்ணின் உடலை போலீசார் பிணமாக மீட்டனர்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா சர்பாடி கிராமம் அருகே நேத்ராவதி ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையில் இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதைபாா்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற பொது மக்கள் உடனே பண்ட்வால் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த தகவலின்போில் போலீசார் அந்த பகுதிக்கு தீயணைப்பு படையினருடன் விரைந்து வந்தனர். பின்னர் ஆற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story