ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிறுவன் சாவு
ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலியானார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா லிங்கேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவன் சுவால் (வயது 9). இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சுவால் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தான். அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் ஆட்டோ டயர் இறங்குவதை தவிர்க்க டிரைவர் ஆட்டோவை திருப்பினார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஆட்டோவில் இருந்து சுவால் தவறி விழுந்தான். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சுவால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். சம்பவம் குறித்து மதுகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story