டெல்லியில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்


டெல்லியில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு: 3 பேர்  படுகாயம்
x

Image Courtesy : ANI 

இந்த விபத்தில் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லியில் , பஹர்கஞ்ச் பகுதியில் நேற்று நான்கு மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது ,மேலும் காயத்துடன் 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வசித்து வந்தது மற்றும் தரை தளத்தில் பல கடைகள் உள்ளன.இந்த நிலையில் நேற்று முதல் தளத்தில் இரண்டாவது தளத்தின் கூரை இடிந்து விழுந்து,விபத்து ஏற்பட்டுள்ளது .இந்த கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story