சிறுமியை கற்பழித்த காதலனுக்கு நிபந்தனை ஜாமீன்


சிறுமியை கற்பழித்த காதலனுக்கு நிபந்தனை ஜாமீன்
x

சிறுமியை கற்பழித்த காதலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

தார்வார்: கர்நாடக மாநிலம் கொப்பல் அருகே கடதின்னி கிராமத்தைச் சேர்ந்தவர் வினய்குமார்(வயது 19). இவரும், 14 வயது சிறுமியும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிறுமியை வினய்குமார் கற்பழித்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கொப்பல் போலீசார் வினய்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜாமீன் கேட்டு வினய்குமார் தாக்கல் செய்த மனுவை கொப்பல் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதனால் வினய்குமார் சார்பில் ஜாமீன் கேட்டு தார்வாரில் உள்ள ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சிவசங்கர் அமரன்னவர் முன்னிலையில் நடந்தது. அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து வினய்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story