பிரம்மோற்சவ விழா 3-வதுநாள்:மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா


பிரம்மோற்சவ விழா 3-வதுநாள்:மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா
x

கோப்புக்காட்சி

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று காலை மலையப்பசாமி சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தார்.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான இன்று அதிகாலை மூலவருக்கு சுப்ரபாதம், தோமால சேவை, சகஸ்ர நாமார்ச்சனையும், உற்சவர்களுக்கு திருமஞ்சனமும் நடந்தது.

அதன் பிறகு உற்சவர் மலையப்பசாமி வாகன மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் மகாவிஷ்ணுவை வழிபட்டால் பக்தர்களுக்கு தைரியம், வீரம் வரும். சிம்ம தரிசனம் செய்தால் பக்தர்களுக்கு அனைத்து ஆற்றலும் கிடைக்கும் என்பதை உணர்த்தவே உற்சவர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். இரவு முத்துப்பந்தல் வாகன வீதி உலா நடக்கிறது.


Next Story