வியாபாரி வீட்டின் கதவை உடைத்து


வியாபாரி வீட்டின் கதவை உடைத்து
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ.5 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு டவுன் எம்.ஜி. ரோடு பகுதியில் கமல்தீப் என்பவருக்கு சொந்தமான துணிக்கடை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு கமல்தீப் சென்றிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பின்பகுதி வழியாக சென்று கதவை உடைத்துள்ளனர். பின்னர் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் பீரோவை உடைத்து, அதில் இருந்த பணம், நகையை திருடி சென்றனர். நேற்று முன்தினம் மாலை கமல்தீப் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோ மற்றும் பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், ரூ.4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் நகைள், ரூ.35 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கமல்தீப், சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story