குஜராத் பாலம் விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு


குஜராத் பாலம்  விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2022 9:28 PM IST (Updated: 30 Oct 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

ஆமதாபாத்,

குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இதன்பின்னர்,

கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிலையில், பாலத்தில் இன்று 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்

இதுபற்றி தகவல் அறிந்ததும், பிரதமர் மோடி மீட்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ .2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்


Next Story