புனேவில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது சாந்தினி சவுக் மேம்பாலம்..!


புனேவில் வெடிவைத்து தகர்க்கப்பட்டது சாந்தினி சவுக் மேம்பாலம்..!
x

புனேவில் சாந்தினி சவுக் மேம்பாலம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.

புனே,

மாராட்டியம் மாநிலம் புனே நகரில் பழமையான சாந்தினி சவுக் மேம்பாலம் உள்ளது. இது மும்பை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையே அமைந்திருக்கும் மிக முக்கிய சந்திப்பு பகுதியாகும். இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அனைவருக்கும் தெரிந்தது தான். இதனால் அந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நள்ளிரவு 1 மணியளவில் 50 மீட்டர் நீளமுள்ள அந்த பழமையான பாலம் வெடி வைத்து 6 வினாடிகளில் தகர்க்கப்பட்டது. பாலம் தரைமட்டமானதும் இடிபாடுகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாலத்தை தகர்க்க சுமார் 600 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மும்பையைச் சேர்ந்த நிறுவனம், டெல்லியில் அண்மையில் இரட்டைக் கோபுரங்களை தகர்த்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான், இந்தப் பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டது.


Next Story