கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு துணைத்தேர்வு ஆகஸ்டு 12-ந் தேதி தொடக்கம்-பள்ளி கல்வித்துறை அறிவிப்பு


கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு துணைத்தேர்வு ஆகஸ்டு 12-ந் தேதி தொடக்கம்-பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு துணைத்தேர்வு ஆகஸ்டு 12-ந் தேதி தொடங்குவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு துணைத்தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பி.யூ. கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத உள்ளனர்.

முதல் நாளான 12-ந் தேதி கன்னடம், 13-ந் தேதி இயற்பியல், 16-ந் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராட்டி, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு, 17-ந் தேதி வேதியியல், 18-ந் தேதி கணக்கு பதிவியியல், மனை அறிவியல், 19-ந் தேதி அரசியல் அறிவியல், கணிதம், 20-ந் தேதி வணிக படிப்பு, 22-ந் தேதி ஆங்கிலம், 23-ந் தேதி உயிரியல், பொருளியல், 24-ந் தேதி வரலாறு, 25-ந் தேதி கணினி அறிவியல், சமூகவியல் பாட தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


Next Story