கூரியர் நிறுவனம் மீது தொழில் அதிபர் புகார்


கூரியர் நிறுவனம் மீது தொழில் அதிபர் புகார்
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லிக்கு அனுப்பிய கார் சென்றடையவில்லை என்று கூரியர் நிறுவனம் மீது தொழில் அதிபர் புகார் அளித்துள்ளார்.

ஜெயநகர்:-

பெங்களூரு ஜெயநகர் 8-வது கிராஸ் பகுதியில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள தனக்கு சொந்தமான கார் ஒன்றை டெல்லியில் வசித்து வரும் உறவினருக்கு அனுப்புவதற்கு முயன்றார். இதற்காக அவர் கலாசிபாளையம் பகுதியில் உள்ள கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டார். இதையடுத்து அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு, தனது காரை அவர்களிடம் ஒப்படைத்தார். அதன்படி குறித்த காலத்திற்குள் அவரது கார் டெல்லியில் உள்ள உறவினரை சென்று அடைந்து இருக்க வேண்டும்.

ஆனால் கார் அவருக்கு போய் சேரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொழில் அதிபர் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் கூடுதல் பணம் கேட்டுள்ளனர். அந்த தொகையையும் அவர் கொடுத்துவிட்டு காத்திருந்துள்ளார். ஆனால் அவரது கார் உறவினரை சென்றடையாமல் இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொழில் அதிபர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரி மீது சித்தாப்புரா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story