2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும்; ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு


2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும்;  ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:30 AM IST (Updated: 27 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.

உப்பள்ளி;


தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் தேஷ்பாண்டே நகரில் ஜம்கான் மைதானத்தில் நேற்று உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி சார்பில் 'பவுர சன்மானா' என்ற பெயரில் ஜனாதிபதிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.

மைசூருவில் தசரா விழாவை தொடங்கி வைத்த அவர், அங்கிருந்து தனி விமானம் மூலம் உப்பள்ளி விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கவர்னர் தாவர்சந்த் கெலாட், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி மற்றும் பலர் வந்தனர்.

விமான நிலையத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, தார்வார் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பா.ஜனதாவினர் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து காரில் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு வைத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு 900 கிராம் எடை கொண்ட ஸ்ரீசித்தரோட சாமி சிலையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரிசாக வழங்கினார். விழாவில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியதாவது:- இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அமர் மகாஉற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை நினைக்காமல் இருக்க முடியாது. அவர்களின் தியாகத்தை நினைவு கூறவேண்டிய நேரம் இது. அதேபோல இந்தியா அனைத்து துறைகளிலும் தன்னிறைவு அடையக்கூடிய நேரம். அனைவரும் இதற்கு இணைந்து செயல்படவேண்டும்.

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை தன்னிறைவு அடைந்த நாடாக மாற்றவேண்டும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்கவேண்டும். ஆன்மிகம், இலக்கியம், இசை, கலை மற்றும் கல்வித்துறையில் உப்பள்ளி-தார்வாடை சேர்ந்தவர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இந்த 'பவுர சன்மானா' நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story