பெங்களூரு-டெல்லி ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைப்பு
பெங்களூரு-டெல்லி ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-பெங்களூரு- டெல்லி, டெல்லி-பெங்களூரு இடையே தினமும் இயங்கும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில்களில் (12627/12628) கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைக்கப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் ரெயிலில் வருகிற டிசம்பர் மாதம் 30-ந் தேதி முதல் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைக்கப்படும். டெல்லியில் இருந்து புறப்படும் ரெயிலில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந் தேதி முதல் முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. இதுபோல பெங்களூரு-சென்னை ரெயிலில் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 3-ந் தேதி முதலும், சென்னை-பெங்களூரு ரெயிலில் ஜனவரி 4-ந் தேதி முதலும் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைக்கப்பட உள்ளது. இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
Related Tags :
Next Story