நாகமங்களா நகரசபையில் ஒரு வார்டுக்கு இன்று இடைதேர்தல்;
நாகமங்களா நகரசபையில் ஒரு வார்டுக்கு இன்று இடைதேர்தல் நடைபெறுவதால் அந்த பகுதியில் மதுப்பானம் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மண்டியா;
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகாவில் உள்ள நகரசபை வார்டு எண் 3-ல் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து நேற்று மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறியதாவது:-
மண்டியா மாவட்டம் நாகமங்களா நகரசபை வார்டு எண் 3-ல் நாளை .(இன்று) தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் வார்டையொட்டி 3 கி.மீ தூரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் 4 பேருக்கு மேல் சாலையில் நடமாட கூடாது. வீடுகளில் சுப நிகழ்ச்சிகளை நடத்தினால் அருகேயுள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கவேண்டும். மேலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் மதுபானக்கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story