காரில் 'லிப்ட்' கொடுத்து கொள்ளை: 3 பேர் கைது


காரில் லிப்ட் கொடுத்து   கொள்ளை: 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரில் ‘லிப்ட்’ கொடுத்து கொள்ளை: 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு: காமாட்சி பாளையா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் லக்கரேயை சேர்ந்த ஜெய் என்ற மேகே (வயது 24), வினோத்ராஜ் (34), தாவூத் (24) என்று தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் பெங்களூருவில் பஸ் நிலையம் அருகே காரில் நின்று கொண்டு 'லிப்ட்' கொடுப்பதாக கூறி, பொதுமக்களை அழைத்து சென்று, அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம்- நகைகள், பொருட்களை கொள்ளையடிப்பதை தொழிலாக வைத்திருந்தார்கள். கைதான 3 பேரிடம் இருந்து ரூ.4.20 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் மீதும் காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story