கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்த கேரள பெண், ஆற்றில் முழ்கி பலி
கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வந்த கேரள பெண், ஆற்றில் முழ்கி பலியானார்.
மங்களூரு;
உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூரில் மூகாம்பிகை கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முருகன், அவரது மனைவி சாந்தி (வயது 47) மற்றும் அவர்களது மகன் ஆதித்யா ஆகியோர் வந்தனர்.
கோவிலுக்கு வந்த அவர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பு அந்த பகுதியில் ஓடும் சவுபா்ணிகா ஆற்றில் குளித்தனர். அதில் ஆதித்யா ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்ததாக தெரிகிறது. இதனால் அவர் நீரில் தத்தளித்தார். மகன் தத்தளிப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த முருகன் மற்றும் சாந்தி இருவரும் ஆற்றில் குதித்து ஆதித்யாவை காப்பாற்ற முயன்றனர்.
அவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் தத்தளித்தனர். அப்போது அருகில் இருந்தவர்கள் முருகன், ஆதித்யா ஆகியோரை காப்பாற்றினர். ஆனால் சாந்தி நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.