இந்திய மசாலா பொருட்களில் சாணம் கலப்பா? அவதூறு 'யூ டியூப்' வீடியோவை நீக்க கூகுளுக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
தரம்பால் சத்யபால் சன்ஸ் என்ற நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
தரம்பால் சத்யபால் சன்ஸ் என்ற நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அந்நிறுவனம், 'கேட்ச்' என்ற பெயரில் மசாலா பொருட்களை தயாரித்து விற்று வருகிறது.
2 'யூ டியூப்' சேனல்களில், தங்கள் பிராண்ட் உள்பட முக்கிய நிறுவனங்களின் மசாலா பொருட்களில் பசுவின் சிறுநீரும், சாணமும் கலந்திருப்பதாக அவதூறு வீடியோ வெளியாகி இருப்பதாகவும், அதனால் தங்கள் வர்த்தகம் பாதிக்கப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளது.
இந்த மனு, நீதிபதி சஞ்சீவ் நருலா முன்பு விசாரணைக்கு வந்தது. திட்டமிட்டு களங்கப்படுத்தும் நோக்கத்தில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார். எனவே, அந்த வீடியோக்களை நீக்குமாறு 'கூகுள்' நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story