அரசு பஸ்களில் பயண கட்டணத்தை உயர்த்த முடிவா?


அரசு பஸ்களில் பயண கட்டணத்தை உயர்த்த முடிவா?
x
தினத்தந்தி 28 Oct 2022 12:15 AM IST (Updated: 28 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் பயண கட்டணத்தை உயர்த்து தொடர்பாக போக்குவரத்துத்துறை மந்திரி ஸ்ரீராமுலு விளக்கம் அளித்துள்ளார்.

மைசூரு:

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பயண கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாநில போக்குவரத்துத்துைற மந்திரி ஸ்ரீராமுலு, மைசூருவிற்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று வந்தார். அப்போது அவரிடம், நிருபர்கள் அரசு பஸ் கட்டணம் உயர்வு பற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து மந்திரி ஸ்ரீராமுலு கூறியதாவது:-

அரசு பஸ்களில் பயண கட்டணத்தை உயர்த்தப்பட உள்ளதாக வரும் செய்திகள் வெறும் வதந்தி. அரசு பஸ்களில் பயண கட்டணத்தை உயர்த்தும் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. இதற்காக அரசு எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதனால் அரசு பஸ்களின் கட்டணம் தற்போதைய நிலை தொடரும்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூடவே இருந்து குழிப்பறிப்பவர். மல்லிகார்ஜுன கார்கே, ஜி.பரமேஸ்வர், சீனிவாச பிரசாத் போன்றவர்களை மேற்கொண்டு வளர முடியாமல் செய்தவர் தான் சித்தராமையா. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். இதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story