கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் சாவு
தார்வார் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார்.
உப்பள்ளி:
தார்வார் டவுன் பகுதியை சேர்ந்தவர் தேவானந்தா சித்தப்பா (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், தார்வார் அருகே கெலகேரி பகுதியில் சென்றபோது, எதிரே வந்த காரும், அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தேவானந்தா, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story