மகாநதியில் வெள்ளம்: 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது
ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
புவனேஷ்வர்,
மகாநதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பௌத், நயாகடா, சுபர்னாபூர், கட்டாக், கேந்திரபாடா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பௌத் மாவட்டத்தில் உள்ள ஹரபங்கா தொகுதியிலும் நிலைமை மோசமாக உள்ளது.
ஹிராகுட் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஹரபங்கா தொகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. பைதரணி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கனி ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது.
ஜஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தசரதபூர் பகுதிக்கு அருகே உள்ள கனி ஆற்றில் கரையில் 40 அடி அகல உடைப்பு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சூழ்ந்துள்ளன. கேந்திரபாடா மாவட்டத்தில் லூனா, கரண்டியா, சித்ரட்போலா ஆகிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.