கார் லாரி மோதல் - 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!


கார் லாரி மோதல் - 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 9 July 2023 3:54 PM IST (Updated: 9 July 2023 4:17 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் காரும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விஜயவாடா,

விஜயவாடா பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் 7 பேர் திருப்பதியிலிருந்து காரில் வந்தனர். அப்போது காரானது ஸ்ரீ காளகஸ்தி பகுதிக்கு அருகே வந்துகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story