சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 14 பேர் காயம்
சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா மாவட்டம் நாயக்கனஹட்டி அருகே போசதேவரஹட்டி கிராமத்தில் நேற்று முன்தினம் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்த அர்ஜூன், கவுரம்மா, பிரசன்னா, மஞ்சம்மா உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் நாயக்கனஹட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
ஒருவர் சித்ரதுர்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நாயக்கனஹட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story