ஆம்னி வேன் மீது சரக்கு வாகனம் மோதல்; தம்பதி பரிதாப சாவு
சிகாரிப்புரா அருகே ஆம்னி வேன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவமொக்கா;
பள்ளி ஆசிரியை
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா ஆனவட்டி அருகே உள்ள திம்மலப்புரா கிராமத்தை சேர்ந்தவர் மைலாரப்பா (வயது 56). அவரது மனைவி மல்லம்மா (48). இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். அவர் சிவமொக்கா தாலுகா ஹோளலூர் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் அவரது மகள் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம் விடுமுறை முடிந்து திரும்பி செல்வதற்காக முடிவு செய்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் ஆம்னிவேனில் சிவமொக்காவிற்கு சென்றனர். வேனை டிரைவர் ஒருவர் ஓட்டியதாக தெரிகிறது. இதையடுத்து மகளை சிவமொக்காவில் வழியனுப்பி விட்டு திரும்பி மைலாரப்பாவும், மல்லம்மாவும் திம்மலப்புரா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தம்பதி உயிரிழப்பு
அப்போது சிராளகொப்பா- சிகாரிப்புரா இடைேய உள்ள பத்ராபுரா அருகே வந்து ெகாண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் சரக்கு வாகனம் ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென சரக்கு வாகனம், ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ஆம்னி வேனின் முன்பக்கம் அப்பளம்போல் ெநாறுங்கியது.
இதனால் ஆம்னி வேனில் இருந்த கணவன்-மனைவியான மைலாரப்பா மற்றும் மல்லம்மா இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஆம்னி வேனை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கி இருந்த டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவருக்கு வலைவீச்சு
இதில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிராளகொப்பா போலீசார் விபத்தில் உயிரிழந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.