கார்கள் நேருக்குநேர் மோதல்; 3 பேர் நசுங்கி சாவு
கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 3 பேர் நசுங்கி பலியானார்.
பெங்களூரு: கோவா மாநிலம் கங்கொனா அருகே டாரி என்ற இடத்தில் நேற்று காலை இரு கார்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் இரு கார்களும் அப்பளம் போல் நொறுங்கின. இதில் கர்நாடக மாநிலம் உத்தகன்னடா மாவட்டம் கார்வாரில் இருந்து சென்ற ஒரு காரில் பயணித்த 3 பேர் பலியானார்கள்.
மேலும் இரு கார்களில் இருந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் விசாரணையில் பலியானவர்கள் உல்லஷா நாகேர் (வயது 60), அவரது மனைவி வீணா நாகேர் (58), இவர்களது மகன் ஹரீஷ் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story