எம்.எல்.சி. கார் மீது முட்டை, கல் வீசிய விவகாரம்: ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் 14 பேர் மீது வழக்கு


எம்.எல்.சி. கார் மீது முட்டை, கல் வீசிய விவகாரம்:  ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் 14 பேர் மீது வழக்கு
x

எம்.எல்.சி. கார் மீது முட்டை, கல் வீசிய விவகாரத்தில் ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநகர்: ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா டவுன் பைரப்பட்டணா பகுதியில் நேற்று முன்தினம் அரசு சார்பில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு சன்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து போராட்டம் நடத்திய ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள், பா.ஜனதா எம்.எல்.சி. சி.பி.யோகேஸ்வர் கார் மீது முட்டை, கல்லை வீசி தாக்கினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சி.பி.யோகேஸ்வரின் கார் டிரைவர் வெங்கடேஷ் அளித்த புகாரின்பேரில் ஜனதாதளம்(எஸ்) தொண்டர்கள் 14 பேர் மீது சன்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story