குடிபோதையில் விபத்து: மாநகராட்சி டிரைவர் மீது வழக்கு


குடிபோதையில் விபத்து:   மாநகராட்சி டிரைவர் மீது வழக்கு
x

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய மாநகராட்சி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு ஆர்.ஆர்.நகர் மாநகராட்சி மண்டலத்தில் இணை கமிஷனராக பணியாற்றி வருபவரிடம் சிவசங்கர் என்பவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவசங்கர் காரில் ஆர்.ஆர்.நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிரே வந்த காரும், சிவசங்கர் ஓட்டி சென்ற காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 கார்களும் சேதம் அடைந்தன. விபத்து குறித்து அறிந்ததும் பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது சிவசங்கர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனால் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story