மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு


மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
x

மங்களூரு பல்கலைக்கழக கல்லூரியில் மோதலில் ஈடுபட்ட 6 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் ஹம்பன்கட்டே பகுதியில் மங்களூரு அரசு பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்குள் வீர் சாவர்க்கர் மற்றும் பாரதமாத உருவபடத்தை வைத்தனர்.

இதற்கு மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மீண்டும் இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி மோதிக்கொண்டனர்.

இதில் 3 மாணவர்கள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பு மாணவர்களும் தனித்தனியாக போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக 6 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story