மகளுடன் தாய் தற்கொலை செய்த வழக்கு; 2 பேர் கைது


மகளுடன் தாய் தற்கொலை செய்த வழக்கு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 March 2023 11:15 AM IST (Updated: 6 March 2023 11:21 AM IST)
t-max-icont-min-icon

மங்களூரு அருகே மகளுடன் தாய் தற்கொலை செய்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு தாலுகா பர்கியை அடுத்த கோடிபையல் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 33). இவரது மகன் ஷோபியா (4). 12 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 1-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த விஜயா, தனது மகள் மற்றும் மகனுடன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதில் விஜயா மற்றும் அவரது மகள் இறந்துவிட்டனர். மகன் மட்டும் உயிர் தப்பினார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விஜயா மற்றும் அவரது மகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் நடந்த சோதனையில் போது, ஒரு கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் ஜெப்பினமொகரு பகுதியை சேர்ந்த பிரபு, மமதா ஆகியோர் விஜயாவிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர். அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை முடிவை தேடி கொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த பர்கி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலை வைத்து போலீசார் நேற்று முன்தினம் பிரபு, மமதா ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story