தொழிலதிபரிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு


தொழிலதிபரிடம் ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
x

அன்னிய வர்த்தக இணை தலைமை இயக்குனர் சம்பாஜி ஏ.சவான், துணை தலைமை இயக்குனர் பிரகாஷ் எஸ்.காம்ப்ளே ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

அன்னிய வர்த்தக இணை தலைமை இயக்குனர் சம்பாஜி ஏ.சவான், துணை தலைமை இயக்குனர் பிரகாஷ் எஸ்.காம்ப்ளே ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மூலதன எந்திர உபகரணங்கள் இறக்குமதி செய்வதற்காக, ராதா மாதவ் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டு இருந்தது. விதிமுறைப்படி, இறக்குமதி மூலம் சேமிக்கப்படும் வரியின் மதிப்பில் 8 மடங்குக்கு சமமான தொகைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அந்தவகையில், ரூ.16 கோடியே 81 லட்சம் வரி சேமித்த அந்த நிறுவனம், ரூ.135 கோடிக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால், வெறும் ரூ.17 கோடிக்கு மட்டுமே பொருட்களை ஏற்றுமதி செய்தது. இன்னும் ரூ.118 கோடிக்கு ஏற்றுமதி செய்திருக்க வேண்டும். ஆனால், போலி ஆவணங்களை அளித்து, ரூ.118 கோடிக்கு ஏற்றுமதி செய்ததுபோல் கணக்கு காண்பித்தனர். இதற்கு சம்பாஜி சவான், பிரகாஷ் காம்ப்ளே ஆகியோர், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிபர் ரமேஷ் சவானிடம் ரூ.1 கோடி லஞ்சமாக பெற்றது தெரிய வந்தது. 2018-ம் ஆண்டு கைமாறிய இந்த லஞ்சம் தொடர்பாக, சம்பாஜி சவான், காம்ப்ளே ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. அத்துடன், டெல்லி, டாமன், மும்பை, புனே ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது.


Next Story