சிபிஐ, அமலாக்கத்துறை தேவையற்ற தொல்லைகளை கொடுக்கின்றன : கெஜ்ரிவால் விமர்சனம்
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் தேவையற்ற தொல்லைகளை கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் தேவையின்றி அனைவருக்கும் தொல்லைகள் கொடுப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கெஜ்ரிவால் கூறியதாவது:-
டெல்லி மதுபானக்கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும் பல கோடி ஊழல் நடைபெற்று இருப்பதாக டெல்லி துணை நிலை கவர்னர், சிபிஐ மற்றும் பாஜக ஆகியவை வெவ்வேறு தொகைகளை கூறி வருகின்றன. ஆனால், உண்மையில் இது என்னவென்றே எனக்கு புரியவில்லை' என்றார்.
Related Tags :
Next Story