இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இலகு ரக போர் ஹெலிகாப்டர்: நாட்டிற்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்...!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்.
புதுடெல்லி,
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் இணைக்கப்பட்டது. சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிட்டேட் இந்த இலகு ரக போர் விமானத்தை தயாரித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற விமானப்படை நிகழ்ச்சியில், இந்த ஹெலிகாப்டர் விமானப்படையில் இணைக்கப்பட்டது. இதில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (LCH) ஜோத்பூரில், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் தலைமை ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர் சௌதாரி ஆகியோர் முன்னிலையில் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.
இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டரை விமானப்படையில் சேர்ப்பதன் மூலம், விமானப்படையின் பலம் அதிகரிக்கும் என முன்னதாக அவர் டுவிட்டரில் அவர் பதிவிட்டார்.
முதல் இலகுரக போர் ஹெலிகாப்டரின் முக்கிய அம்சங்கள்:
* எதிரி நாட்டு வான்வெளி தாக்குதல்களை தடுக்கும் வகையில் இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்லன.
* 5.8 டன் எடை கொண்ட இந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* கிழே விழுந்தாலும் மிகக்குறைவான அளவில் மட்டுமே சேதம் ஏற்படும் வகையில் லேண்டிங் கியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஹெச்.ஏ.எல் நிறுவனத்தால் இலகு ரக ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* தேடுதல் பணி, மீட்புப்பணி, டேங்கர்கள் அழிப்பு, தரைப்படை தாக்குதல் என பல முக்கிய பணிகளை ஹெலிகாப்டர்கள் செய்ய திறன் உடையது.
* மணிக்கு 268 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த ஹெலிகாப்டர்கள் எதிரிகளின் ரேடாரில் இருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.