மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா பதவி காலம் நீட்டிப்பு


மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா பதவி காலம் நீட்டிப்பு
x

மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா பதவி காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் உள்துறை செயலரான அஜெய்குமார் பல்லா பதவி காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அவரது பதவி காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் 2023 ஆக.23 வரை அஜெய்குமார் பல்லா பணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story