தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் 'நோட்டரி பப்ளிக்' எண்ணிக்கை அதிகரிப்பு


தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் நோட்டரி பப்ளிக் எண்ணிக்கை அதிகரிப்பு
x

தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் ‘நோட்டரி பப்ளிக்’ எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 'நோட்டரி பப்ளிக்' பணியிட நியமனங்களை மத்திய அரசு செய்து வருகிறது. வக்கீல் தொழிலை குறிப்பிட்ட ஆண்டுகள் செய்கிறவர்களை நோட்டரி சட்டத்தின் கீழ் 'நோட்டரி பப்ளிக்'குகளாக மத்திய அரசு நியமிக்கிறது. இவர்கள் சான்றிதழ்களை சரிபார்த்து கையெழுத்திடுதல், சத்தியபிரமாண உறுதிமொழி செய்வித்தல், உறுதிமொழி பத்திரம் வாங்குதல் போன்ற பணிகளை செய்கிறார்கள்.

தற்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளா உள்பட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'நோட்டரி பப்ளிக்'குகள் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

லடாக்கில் வரலாற்றில் முதல்முறையாக 50 புதிய பணியிடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

மத்திய சட்டத்துறை ராஜாங்கமந்திரி எஸ்.பி.சிங் பாஹல் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.


Next Story