கூட்டுறவு சங்க தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை


கூட்டுறவு சங்க தலைவர்  தூக்குப்போட்டு தற்கொலை
x

கூட்டுறவு சங்க தலைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெங்களூரு: பெங்களூரு பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காமதேனு கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக ராமகிருஷ்ணா (வயது 55) இருந்து வந்தார். அவர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில், பொம்மனஹள்ளியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் ராமகிருஷ்ணா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பொம்மனஹள்ளி போலீசார் விரைந்து சென்று ராமகிருஷ்ணாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாரிடம் சிக்கியது. அதில், கூட்டுறவு சங்கத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருப்பதாக கூறி இருந்தார்.

அந்த கூட்டுறவு வங்கியில் பொதுமக்கள் வாங்கிய பல லட்சம்ரூபாய் கடனை திரும்ப கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் கூட்டுறவு சங்கம் நஷ்டத்தை சந்தித்ததால், பணப்பிரச்சினையில் ராமகிருஷ்ணா தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story