பெங்களூருவில் 2 நாட்களுக்கு சாரல் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்


பெங்களூருவில் 2 நாட்களுக்கு சாரல் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 2 நாட்களுக்கு சாரல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இரவு மற்றும் காலை நேரங்களில் பனியால் குளிர்ச்சியான சூழல் உருவாகி உள்ளது. விரைவில் கோடைகாலம் தொடங்க உள்ளதால் படிப்படியாக குளிர்ந்த சூழல் குறைய தொடங்கும். இந்த நிலையில் பெங்களூருவில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சில இடங்களில் லேசான சாரல் மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குடகு போன்ற மலைநாடு மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மைசூரு, பெங்களூரு, பெங்களூரு புறநகர், தாவணகெரே, மண்டியா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய கூடும். பருவமாற்றம் காரணமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும், இரவில் குளிர்ச்சியான நிலைக்கு திரும்ப கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story